அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுகோள்


அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுகோள்
x

அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் 4-வது மாநாடு நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மணிமேகலை தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சுமதி சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் ரத்தினமாலா கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். வருகிற 19, 20-ந் தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டிலும், வருகிற டிசம்பர் மாதம் 6, 7, 8, 9-ந் தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story