ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த கோரிக்கை


ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த கோரிக்கை
x

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

கரூர் மண்டலம் சார்பில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தசரதராமன், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015 முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாளில் வழங்கப்படும் என கொடுத்த தேர்தல் வாக்குறுதியினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை 2022 நவம்பர் மாத பென்ஷனில் உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றுள்ளதை திரும்ப பெற்று அகவிலைப்படி உயர்வினை நிலுவை தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கூட்டத்திலும் மற்றும் பென்ஷன் டிரஸ்ட் கூட்டத்திலும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தை கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டல தலைவர் சக்திவேல், செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story