கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி 18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்- கடைகளும் அடைப்பு


கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி 18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்- கடைகளும் அடைப்பு
x

எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக் கோரி 18 கிராம மக்கள் கடையடைப்பு- உண்ணாவிரதம் இருந்தனர்.

மதுரை

உசிலம்பட்டி,


திருவிழா

மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் தேரோட்டம் எழுமலையில் உள்ள நான்கு முக்கிய வீதிகளில் வழியாக நடைபெறுவதும் வழக்கம். இந்த ஆண்டு இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தை நடத்த கோவில் கமிட்டியினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கு சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி தர மறுத்தனர்.

இதனையடுத்து இக்கோவிலை வழிபடும் எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க கோரி எழுமலையில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

மேலும் எழுமலை மட்டுமின்றி 18 கிராமங்களிலும் உள்ள கடைகளை அடைத்து இப்பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோவில் நிர்வாக கமிட்டியினரும், அனைத்து உறவின்முறை தலைவர்களும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story