கடத்தப்பட்ட கல்தூண் மீட்பு


கடத்தப்பட்ட கல்தூண் மீட்பு
x

விழுப்புரம் அருகே கடத்தப்பட்ட கல்தூண் மீட்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ளது முட்டத்தூர் கிராமம். இங்கிருக்கும் பருத்திப்பட்டு எனும் மலை அடிவாரத்தில் சுமார் 33 அடி உயரமுள்ள கல்தூண்கள் இருக்கின்றன. இவை செஞ்சி நாயக்கர் காலத்தை (கி.பி.15-16-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். கடந்த 31-ந் தேதி மாலை மேற்கண்ட தூண்களில் ஒன்று திடீரென மாயமானது. லாரியில் யாரோ கடத்திச்சென்று விட்டனர். இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கடத்தப்பட்ட கல்தூண் விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள வேம்பி எனும் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், நேற்று வேம்பி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக கல்தூண் அங்கிருந்து மீட்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் ஏற்கனவே இருந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முட்டத்தூர், கல்யாணம்பூண்டி கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். அப்போது 2 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story