டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

அத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த இடத்தை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு நடைபெற்றது. இதையடுத்து அங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் என கூறி அம்மன் நகர் மக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வந்தவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் எதிர்ப்பை அடுத்து பூமி பூஜை நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story