கடத்தூருக்கு வருகிற 10-ந் தேதி வருகை தரும்டாக்டர் அன்புமணி ராமதாசுக்குசிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்
மொரப்பூர்:
தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் கடத்தூரில் நடந்தது. மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.அரசாங்கம் வரவேற்றார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம், தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் வருகிற 10-ந்் தேதி கடத்தூரில் நடைபெறும் வாக்குச்சாவடி களப்பணியாளர் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தரும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் எம்.பி.யை வரவேற்பது அளிப்பது என்றும், இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் அனைவரையும் கூட்டத்தில் பங்கேற்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமலிங்கம், இமயவர்மன், ஆர்.வணங்காமுடி, சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வசந்தராஜ், பசுமை தாயகம் மாநில துணைத்தலைவர் மாது, மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், தலைவர் மதியழகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு, தலைவர் கோவிந்தராஜ், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் முத்துசாமி, செயலாளர் சின்னசாமி, நிர்வாகிகள் பெரியசாமி, செந்தில், கோவிந்தராசன், ஜெயக்குமார், ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, வேடியப்பன், சின்னராஜ், செல்வம், தம்பிதுரை, கலைமணி, கார்த்திக், ரங்கநாதன், சேகர், சக்திவேல், கோவிந்தன், நராயணன், பிரின்ஸ் முருகேசன், சரவணன், சின்னசாமி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.