ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார். அதனை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை, உதயா, லிங்கநாதன், பத்மநாபன், சீதாபதி பாலாஜி பூபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story