4 மாடுகளை கத்தியால் வெட்டிய விவசாயியை கைது செய்யக்கோரி சாலை மறியல்


4 மாடுகளை கத்தியால் வெட்டிய விவசாயியை கைது செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 4 மாடுகளை கத்தியால் வெட்டிய விவசாயியை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தம்பி குமார் (வயது 50) விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் கட்டி இருந்த 2 காளை மற்றும் 2 பசு மாடுகளை குமார் கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மனைவி லலிதா உடனே அரகண்டநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் காயமடைந்த 4 மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் நீ்ண்ட நேரமாகியும், மருத்துவர்கள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லலிதா தனது உறவினர்களுடன் சேர்ந்து அங்குள்ள மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க உடனே டாக்டர்கள் வரவேண்டும். மேலும் மாடுகளை கத்தியால் வெட்டியது தொடர்பாக குமாரை கைது செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். அப்போது அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகளை கத்தியால் வெட்டியது தொடர்பாக குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story