மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
x

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் பஞ்சாபகேசன் வரவேற்றார். சாலை பாதுகாப்பு அலகு விழுப்புரம் கோட்டப்பொறியாளர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு, இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களிடையே நடத்தப்படும் காரணம் குறித்து விளக்கிப் பேசினார். உதவிக் கோட்டப்பொறியாளர் ராஜேந்திரன் சாலை பாதுகாப்பு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்கச் செய்தார். 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையில் பள்ளியில் பயிலும் சுமார் 350 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும், சாலையில் பயணிக்கும்போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சமிக்ஞைகள், எச்சரிக்கை சமிக்ஞைகள், தகவல் சமிக்ஞைகள் ஆகியவை குறித்து பதாதைகள் மூலமும் கற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு, விதிமுறை மீறல், மாணவ- மாணவிகள் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், ஒரு மாணவன் தன்னுடைய இல்லத்தில் இருந்து பள்ளி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும் தோழன் அமைப்பு ஜெகதீஸ்வரன் விளக்கினார். விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காக்கும், தமிழக அரசின் "நம்மை காக்கும் 48" திட்டம் குறித்து கோவர்த்தன் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் செந்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story