சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 6 Sept 2023 4:45 AM IST (Updated: 6 Sept 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதி வரை சென்றது. ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முன்னதாக சாலை பாதுகாப்வை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story