சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 15 Sep 2023 8:45 PM GMT (Updated: 15 Sep 2023 8:45 PM GMT)

பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார்.

பேரணி

உயிர் அமைப்பு, பொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசும் போது கூறியதாவது:-

கவனமாக வாகனங்களை ஓட்டினாலே 90 சதவீதம் விபத்துகளை தடுக்க முடியும். அபராதம் விதிப்பதால் விபத்துகள் குறைவதில்லை. இதனால் சாலை விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று குழந்தைகள் கூறினால் பெற்றோர்கள் கேட்பார்கள். வாழ்க்கையில் நிறைய லட்சியம் இருக்கிறது. எனவே விபத்தினால் ஒருவர் இறக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டி

விழாவில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, உயிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி கிளப் தலைவர் அருள்முருகன், செயலாளர் சதீஷ்சந்திரன், கோவை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்களை பொறுத்தவரை இந்த ஆண்டு ரூ.1 கோடியே 18 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி எடுத்து கொடுத்திருக்கிறோம். மேலும் ரூ.9 கோடிக்கான புகார்கள் உள்ளது. இந்த புகாரில் ரூ.9 கோடியே 20 லட்சத்தை குற்றம் செய்தவர்களின் வங்கி கணக்கில் முடக்கி வைத்துள்ளோம். கோர்ட்டை அணுகி வழக்கு குறித்து விரிவாக எடுத்து கூறி முடக்கிய பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story