சாலை பாதுகாப்பு-போதை பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு-போதை பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
x

சாலை பாதுகாப்பு-போதை பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் நகர அண்ணா சிலை அருகே அரியலூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள், மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு ஜெயங்கொண்டம் நகரில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதேபோன்று செந்துறை, தளவாய், விளாங்குடி, தா.பழூர் மற்ற பகுதிகளிலும் போலீசார் சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகிப்பவர் குறித்தும், விற்பனை குறித்தும் எவ்வித அச்சமும் இன்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையம் அருகே திருட்டு மற்றும் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பூட்டாமல் செல்லக்கூடாது. பூட்டிய சாவியை வீட்டிலே வைக்கக்கூடாது. பணம், நகையை வங்கியில் வைத்து பாதுகாக்கவும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் வழங்கினர். மேலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.


Next Story