சாலைப்பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு


சாலைப்பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு
x

சாலைப்பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

கரூர்

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

சாலைப்பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதிபெற்ற 200-க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கேட்டு 15 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு சாலைப்பணியாளராக பணி நியமனம் வழங்க கோட்ட பொறியாளர்கள் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதிய மாற்றம் ரூ.5,200 - ரூ.20,200, தரஊதியம் ரூ.1,900 ஆகியவற்றை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை, சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு தபால் மூலம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. இதற்கு உட்கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உள்ள தபால் பெட்டியில் தபால்களை முதல்-அமைச்சருக்கு அனுப்பினர்.

1 More update

Next Story