சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x

பொன்னமராவதியில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தீன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கட்டையாண்டிபட்டி நல்லு, கண்ணன், சவுந்தரம், கனி, பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதியில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனை குழு தேர்தலை நடத்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த கூடாது. சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story