பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லாத கடனாக ரூ.15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், ரபீக், கோகிலா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.


Next Story