டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலியை பறித்த கொள்ளையன்...!


டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலியை பறித்த கொள்ளையன்...!
x

ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி கொள்ளையன் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்.

ஆப்பக்கூடல்,

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி(50).

இந்த நிலையில், நேற்று முன்தினம் சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2-மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயா தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார், தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story