இரவில் கொடூர ஆயுதங்களுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள் - எடப்பாடியில் பரபரப்பு


இரவில் கொடூர ஆயுதங்களுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள் - எடப்பாடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jun 2022 10:35 AM IST (Updated: 20 Jun 2022 10:35 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பகுதியில் இரவு நேரங்களில் கொடூர ஆயுதங்களுடன் நடமாடும் கொள்ளையர்களால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோண பைப் குடியிருப்பு, பூலாம்பட்டி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இரவு நேரங்களில் சுற்றித் திரிவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி -பூலாம்பட்டி பிரதான சாலையில் உள்ள கோணபைப் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள குடியிருப்புகளில் அடையாளம் தெரியாத சில நபர்கள் முகமூடி அணிந்து சுற்றித் திரிந்தனர்.

குடியிருப்புகளில் நுழைய முயன்ற அவர்களை அப்பகுதியில் இருந்த நாய்கள் குறைத்து விரட்டியதால், அவர்கள் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் கையில் வீச்சரிவாள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளை சுற்றி வந்தது தெரியவந்தது.

இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.


Next Story