நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 201 நாள் சிறை


நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 201 நாள் சிறை
x

சென்னை திருவல்லிக்கேணியில் நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் உத்தரவின்பேரில் அவருக்கு 201 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி துலுக்காணம் தோட்டம் முதல் தெருவை சேர்ந்தவர் கில்பர்ட் ரவி (வயது 42). இவர் புளியந்தோப்பு போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை வழக்குகளும் உள்ளது. இந்த நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் முன்பு ஆஜராகி, 'நான் திருந்தி வாழபோகிறேன். இனி குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன்' என்று நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் அளித்தார். இந்த நிலையில் கில்பர்ட் ரவி கடந்த மாதம் 18-ந்தேதி அன்று கொலை முயற்சியில் கைதாகினார். இதையடுத்து நன்னடத்தை உறுதிமொழியை மீறிய குற்றத்துக்காக மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் உத்தரவின்பேரில் அவருக்கு 201 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story