ரூ.1¾ கோடியில் பாலம் கட்டும் பணி


ரூ.1¾ கோடியில் பாலம் கட்டும் பணி
x

கொளத்தூர் ஏரி உபரிநீர் வெளியேறும் இடத்தில் ரூ.1¾ கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி உபரிநீர் வெளியேறும் இடத்தில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதி மூலம் இந்த பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. 3 மீட்டர் உயரம், 10 மீட்டர் அகலம், 23 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இதில் தண்ணீர் செல்வதற்கு 3 குழாய்கள்அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் உபரிநீர் சாலையில் வழியாமல், பாலத்தின் வழியே சென்று கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதனால் உபரிநீர் வீணாகாமல் ஏரிக்கு செல்லும். பாலம் கட்டும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.


Next Story