கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது


கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
x

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் கற்பக ரமேஷ் (வயது 40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் இவருடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி எனவும், உங்களது கிரெடிட் கார்ட்டு கடன் தொகையை அதிகப்படுத்தி தருவதாக கூறினார். மேலும் உங்கள் செல்போன் எண்ணிக்கு ஒரு 'லிங்க்' அனுப்பி உள்ளேன். அதை கிளிக் செய்து உங்கள் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை செல்லுங்கள் என கூறினார்.

அதை நம்பிய ரமேஷ் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை அந்த நபரிடம் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் எடுக்கப்பட்டதற்கான குறுந்தகவல் அவரது செல்போனுக்கு வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் இதுகுறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரமேஷ் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றப்பட்ட வங்கி கணக்கை சோதனை செய்தனர். அதில் கானத்தூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முகமது உசேன் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரவிக்குமார், முகமது உசேன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story