ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1.39 கோடி அபராதம்


ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1.39 கோடி அபராதம்
x
தினத்தந்தி 13 Sep 2023 7:30 PM GMT (Updated: 13 Sep 2023 7:30 PM GMT)

சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1 கோடியே 39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1 கோடியே 39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரெயில்களில் சோதனை

ெரயில்களில் விதிமுறைகளை மீறி பயணம் செய்பவர்களை தடுக்கும் வகையில் ரெயில்களில் சோதனை நடத்த சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே வணிகத்துறை அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சேலம் கோட்ட பகுதிகளில் இயக்கப்படும் ெரயில்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்தினர். அவ்வாறு நடந்த சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்தவர்கள் 12 ஆயிரத்து 890 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.98 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அபராதம்

இதேபோல் முன்பதிவு இல்லா டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த 8 ஆயிரத்து 454 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ரெயில்களில் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் எடைக்கு அதிகமாக கொண்டு சென்றவர்கள் என 27 பயணிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு கடந்த மாதத்தில் ெரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், அதிக லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் உள்பட 21 ஆயிரத்து 271 பேர் பிடிபட்டனர், அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 461 அபராதம் வசூலிக்கப்பட்டது.


Next Story