பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவி


பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவி
x

இந்து முன்னணி குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் மனு

விழுப்புரம்

விழுப்புரம்

குறைதீர்ப்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன் மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 427 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட கலெக்டர் மோகன் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதும் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவி

பின்னர் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியாக 10 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 15 ஆயிரத்துக்கான காசோலை, 3 பேருக்கு திருமண உதவி தொகையாக ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story