போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
x

போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற வேன்கள், ஷேர் ஆட்டோவில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற வாகனங்கள், அதிக ஓசை ஏற்படுத்தும் ஏர் ஹர்ன் பொறுத்திய வாகனங்கள், வாகனத்தின் முன் பகுதியில் கண்ணை கூசும் அளவுக்கு ஒளிரூட்டி சென்ற எல்.இ.டி பல்புகள் பொருத்திய வாகனங்கள் போன்றவற்றை செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஹமீதா பானு, திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்தனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில்:-

அதிக பாரம் மற்றும் தார்பாய் போடாமல் சாலையில் செல்லும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் அரசு நிர்ணயத்துள்ள எடையை ஏற்றி வாகனங்களை இயக்க வேண்டும், இதுபோல வாகனங்களை அலங்கரிப்பதாக கருதி ஆம்னி பஸ்கள், வேன்களில் பல்வேறு நிறங்களில் விளக்குகள் பொருத்தி மற்ற வாகன ஒட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story