பாய்லர் வெடித்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - இந்தியன் ஆயில் நிறுவனம்


பாய்லர் வெடித்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - இந்தியன் ஆயில் நிறுவனம்
x

சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து சிதறியதை அறிந்த ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இந்த விபத்தில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (52) என்பவர் உயிரிழந்தார். 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் ஐ.ஓ.சி நிறுவனத்தில் 2 பாய்லர்கள் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story