மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு ஏக்கருக்கு ரூ.8000, பயறு வகைகளுக்கு ரூ.1200 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான இழப்பீடு அதன் உரச் செலவுகளுக்கும், பயறுக்கான இழப்பீடு விதை செலவுகளுக்கும் கூட போதாது.

33% க்கும் கூடுதலாக மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது அநீதி. பேரிடர் மேலாண்மை விதிகள் தான் இந்த அநீதிக்கு காரணம் என்றால் அவற்றை திருத்தியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிபந்தனையின்றி ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.50,000 வீதமும், பயறு வகைகள் மற்றும் உளுந்துக்கு ஏக்கருக்கு ரூ.15,000 வீதமும் இழப்பீடு வழங்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன பகுதி உழவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருப்பதாவது.


Next Story