சென்னையில் ரூ.7 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் அதிரடி கைது


சென்னையில் ரூ.7 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்; 7 பேர் அதிரடி கைது
x

சென்னையில் ரூ.7 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

சென்னையில் யானை தந்தம் சட்ட விரோதமான முறையில் ரகசியமாக விற்கப்படுவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு கும்பல் இதில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் சில இடங்களில் மாறு வேடத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது 4.03 கிலோ எடையுள்ள யானை தந்தங்களுடன் 7 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களில் 4 பேர் சென்னையையும், 2 பேர் சேலத்தையும், ஒருவர் கர்நாடகத்தையும் சேர்ந்தவர்கள். 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். யானை தந்தங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7.19 கோடியாகும். இந்த யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, நடிகர், நடிகைகள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் இருந்து திருடப்பட்டதா? என தீவிர விசாரணை நடக்கிறது.

மேற்கண்ட தகவலை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story