வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி:தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு


வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி:தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:45 PM GMT)

தேனியில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 38). இவர் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'தேனி பாரஸ்ட்ரோடு 4-வது தெருவை சேர்ந்த கணேசன் (43) எனக்கு அறிமுகம் ஆனவர். அவர், தனக்கு தெரிந்த நபர் மூலம் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு ரூ.7 லட்சம் கேட்டார்.

அதை நம்பிய நான், அவரிடமும், அவருடைய மகன் சஞ்சய் (21), பாரதி மெயின்ரோட்டை சேர்ந்த கீதா கிரேஷ் ஜரின் (40) ஆகியோரிடம் ரூ.7 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன உத்தரவை கொடுத்து ஏமாற்றி விட்டனர்' என்று கூறியிருந்தார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து கணேசன், சஞ்சய், கீதா கிரேஷ் ஜரின் ஆகிய 3 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story