எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்


எழும்பூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்
x

எழும்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சென்னை

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான ரெயில்வே பாதுகப்பு படையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடைமேடை 4-ல் வந்தடைந்த சிற்கார் எக்ஸ்பிரசில் ஏறி சோதனையிட்டனர். அதில் சந்தேகிக்கும் படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு செய்ததில், அவற்றில் ரூ.51 லட்சத்து 88 ஆயித்து 500 ரொக்கப் பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த வெங்கட சந்தீப் குமார் (வயது 36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story