திருப்பூர் மாநகராட்சியில் ரூ.9 கோடி வாடகை பாக்கி; 169 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்


திருப்பூர் மாநகராட்சியில் ரூ.9 கோடி வாடகை பாக்கி; 169 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x

வாடகை செலுத்தாக 169 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு கடைகள் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து வாடகை செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வாடகை செலுத்தாக 169 கடைகளை அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து சுமார் 9 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி செலுத்தப்பட வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Next Story