வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் மனு


வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் மனு
x

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து, தொழில் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் மனு அளித்தனர்.

கோவை,

தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியான வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில்சாலைகளில் பணிபுரியும் பீகார், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது குறித்து, தொழில் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் மனு அளித்தனர். அதில், பீகார் மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை பெரிய அளவிலான ஊடகங்கள் மூலம் பீகாரில் வெளியிடச் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story