கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:00 AM IST (Updated: 5 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கோட்டத்தின் சார்பில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை


அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சிவகங்கை கோட்டத்தின் சார்பில் தபால் அலுவலகங்களில் தினசரி புதிய கணக்கு தொடங்க இலக்கீடு நிர்ணயம் செய்து ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இதையொட்டி சிவகங்கையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் சேர்முக பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், கோட்ட தலைவர் அம்பிகாபதி, செயலாளர் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story