குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி;நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார்


குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி;நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார்
x

குழித்துறையில் ஆடி அமாவாசைைய முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சியை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறையில் ஆடி அமாவாசைைய முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சியை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி திறந்து வைத்தார்.

வாவுபலி பொருட்காட்சி

குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெறவில்லை.

இந்த ஆண்டு 97-வது வாவுபலி பொருட்காட்சி 20 நாட்கள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை 6 மணிக்கு குழித்துறை வி.எல்.சி.மண்டபத்தில் நடந்தது.

பொருட்காட்சியை குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் ராம திலகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா கூட்டம்

தொடர்ந்து வி.எல்.சி. மண்டபத்தில் நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமையில் திறப்பு விழா வாழ்த்து கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் பேரின்பம், சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி, குமரி மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, உதவி இயக்குனர் சந்திர போஸ், நகராட்சி துணை தலைவர் பிரபின் ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் விஜு, சர்தார் ஷா, ரவி, ரீகன், ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லின் கெனில், விஜயலட்சுமி, மினி குமாரி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ஜூலியன் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லில்லி புஷ்பம், ஜெலீலாராணி, செல்வகுமாரி, ரெத்தினமணி, அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை நகராட்சி மேலாளர் ஜெயன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆணையாளர் ராம திலகம் நன்றி கூறினார்.

பக்க காட்சிகள்

இந்த வாவுபலி பொருட்காட்சியில் பல பக்க காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விவசாய விளை பொருட்கள், கைவினை பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றுள்ளன. பொருட்காட்சி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.


Next Story