தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை
காரைக்குடி அஞ்சலக அலுவலகத்தில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை 23-ந்தேதி வரை நடைபெறுகிறது.
காரைக்குடி,
காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய அஞ்சல்துறை சார்பில் அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் காரைக்குடி அஞ்சலகம் அலுவலகத்தில் நேற்று முதல் தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை 5 நாட்கள் வரை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு இந்த தங்க பத்திரத்தின் விலை ஜூன் மாதத்தில் ரூ.5091-ம், ஆகஸ்டு மாதத்தில் ரூ.5197-ம், டிசம்பர் மாதத்தில் ரூ.5409-ம், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.5611-ம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க பத்திரத்தின் சிறப்பு அம்சங்களாக ஒரு கிராம், ரூ.5926-ம், இதற்கு வட்டி விகிதம் 2.5 சதவீதமும், குறைந்தது 1 கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் முதிர்வு காலமாக 8 ஆண்டுகளாகவும், முன் முதிர்வு காலமாக 5 வருடங்களுக்கு பின்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டமாக உள்ளதால் பணத்திற்கு முழு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் எண் ஆகியவை அடையாள சான்றாக ஏற்கப்படும். மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. கோடு நேரில் கொண்டு வரவேண்டும். இதுதவிர வாரிசு நியமனத்திற்கு வாரிசுதாரர்களின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள சான்று ஆகியவை வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.