சேலம்- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்
சேலத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ. அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம்,
சேலத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ. அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சாலை, கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தபோது, அங்கு யாரும் இல்லாத நிலையில், அருள் மற்றும் பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
நீண்ட நேரமாக காக்க வைத்ததால் ஆத்திரத்தில் மனுவை அங்கேயே கிழித்தெறிந்தார். ஒன்றிய குழு தலைவர் கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டர் விடுவதால் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் திட்ட பணிகளை செயல்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story