சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை


சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - பேராசிரியர்களிடம் போலீசார் விசாரணை
x

வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்தி நிதியை முறைகேடு செய்ததாகவும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் சிலரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 5 பேருக்கு கருப்பூர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. இதனால் பேராசிரியர்கள் சுப்ரமணிய பாரதி, ஜெயராமன், ஜெயக்குமார், நரேஷ்குமார் மற்றும் ஊழியர் தந்தீஸ்வரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகினர். இவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் தனியார் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றதா என்று இவர்களிடம் தனித்தனியாக உதவி ஆணையாளர் விசாரணை மேற்கொண்டார்.


Next Story