10 ரேஷன் கடைகளில்கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


10 ரேஷன் கடைகளில்கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனைகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரி குமாரசாமிப்பேட்டை கூட்டுறவு ரேஷன் கடையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்தானம், துணைப் பதிவாளர்கள் ராஜா, மதியழகன் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story