உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்


உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
x

கோடை மழை குறைந்ததால் ராமநாதபுரம் அருகே உப்பளங்களில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கோடை மழை குறைந்ததால் ராமநாதபுரம் அருகே உப்பளங்களில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

உப்பு உற்பத்தி சீசன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். வாலிநோக்கம், திருப்புல்லாணி, உப்பூர், திருப் பாலைக்குடி கோப்பேரிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உப்பள பாத்திகள் உள்ளன.

அதுபோல் இந்த ஆண்டும் தற்போது கோடை கால சீசன் தொடங்கி நடந்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை செல்லும் சாலையில் உள்ள ஆனைகுடி கிராமத்தில் உள்ள உப்பளங்களில் இருந்து கல் உப்புகளை பிரித்தெடுக்கும் பணியில் வேதாரண்யத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை மழை

இதுபற்றி உப்பளத்தொழிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் வேதாரண்யத்தை சேர்ந்த தொழி லாளி சுப்பிரமணியன் கூறியதாவது:- மழைக்கும், உப்புக்கும் பகை. மழை பெய்யும் பட்சத்தில் உப்பு உற்பத்தி செய்ய முடியாது.

இந்த ஆண்டு கோடை மழையால் உப்பு விளைச்சல் அதிகமாகவே பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ உப்புரூ.3.50-க்கு மட்டுமே விலை போகிறது.

நல்ல விலை

தூத்துக்குடியில் இதைவிட அதிகமான விலை. நல்ல விலை கிடைத்து வரும் நிலையிலும் உப்பு விளைச்சல் குறைந்து உள்ளது. தற்போது 10 நாட்களுக்கும் மேலாக கோடை மழை இல்லாததால் உப்பு விளைச்சல் இனி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரி மூலம் அனுப்பி வைக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story