தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,008 சங்காபிஷேகம்


தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,008 சங்காபிஷேகம்
x

கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தையொட்டி பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தையொட்டி பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

பெரியகோவில்

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

1008 சங்காபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட் கிழமையும் சோமவாரமாக கடைபிடிக்கப்பட்டு பெருவுடையாருக்கு சங்காபிஷேம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் சோம வார வழிபாடுகள் நடந்தன. இந்த நிலையில் நேற்று கடைசி சோம வாரத்தையொட்டி பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக புனித நீர் நிரப்பப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பெருவுடையாருக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பபட்ட சங்குகளால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story