தூய்மை பணியாளர்கள் போராட்டம்


தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:15 AM IST (Updated: 6 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதளா பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 30-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த அமைச்சர் கா.ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு கவுன்சிலர் ஒருவர் தூய்மை பணியாளர்களிடம் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, தூய்மை பணியாளர்களை கவுன்சிலர் தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரியும் வலியுறுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், இந்த பிரச்சினை குறித்து புகார் மனுவாக எழுதி தருமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார். மேலும் வார்டு கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை அடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story