சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம்


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டத்தை ரெயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா தொடங்கி வைத்தார்.

சென்னை

சென்னை ரெயில்வே போலீசார் சார்பில் பத்திரிகையாளருக்கான சந்திப்பு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா தலைமை தாங்கினார். அருகில் டி.ஐ.ஜி. அபிஷேக் தீக்சித், ரெயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் மற்றும் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் உடனிருந்தனர். இதையடுத்து நிருபர்களிடம் ஏ.டி.ஜி.பி. வனிதா கூறியதாவது:-

கடந்த 6 மாதத்தில் மட்டும் ரெயில்வே போலீசாரால் 780 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி ரெயில் நிலையங்களில் காணாமல் போன ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 420 மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி மாவட்ட ரெயில் நிலையங்களில் திருட்டு போன பணம் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 880 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டத்தை ஏ.டி.ஜி.பி. வனிதா தொடங்கி வைத்தார்.


Next Story