பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்


பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்
x

குடியாத்தத்தில் பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் துணை கோட்டத்தில் உள்ள குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம், குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம், பரதராமி, மேல்பட்டி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள், செயலாளர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி பகிதி பள்ளிகளில் நடந்தது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும், பள்ளியின் வராண்டாக்களில் இருந்து மாணவர்கள் குதித்து விடாமல் இருக்க இரும்பு கிரில்கள் பொருத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து விடாமல் இருக்க மாடி கதவுகளை பூட்டி வைப்பது, பள்ளி மாணவர்கள் பஸ்சில் வரும்போது டிரைவர் மற்றும் கண்டக்டர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மாணவர்கள் கஞ்சா மற்றும் புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதை கண்காணிப்பது, மாணவர்களிடையே சாதி, மத மோதல் ஏற்படால் பார்த்து கொள்வது, பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் நடத்துவதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story