பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயமுகுந்தன் தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் சரவணசாமி சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த மாறுதல் வழங்கியதால், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story