பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் அக்கா கணவர் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவின் அக்காவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் ராமச்சந்திரன்(வயது 29) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது அக்காவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்த்து வருவதற்காக சென்ற மாணவியை ராமச்சந்திரன் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story