தாயை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் கைது


தாயை கத்தியால் குத்திய பள்ளி மாணவன் கைது
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே தாயை கத்தியால் குத்திய பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதுடைய பெண். இவர் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அந்த பெண்ணை சென்னைக்கு பஸ் ஏற்றிவிடுவதற்காக அவரது 15 வயதுடைய மகன் சங்கராபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவள்ளூர் காப்புக்காடு அருகே சென்றபோது தாய்க்கும், மகனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன் தனது தாய் என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்தினான்.

கைது

இதில் அந்த பெண்ணுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து 15 வயதுடைய சிறுவனை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story