கார் மோதி பள்ளி மாணவன் பலி


கார் மோதி பள்ளி மாணவன் பலி
x

களக்காடு அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலியானான்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் தொழிலாளி அய்யப்பன் (வயது 28). இவரது மகன் கபின் (4). சாலைப்புதூரில் உள்ள பாலர் பள்ளியில் படித்து வந்தான். நேற்று காலை கபின் அங்குள்ள சேரன்மாதேவி-பணகுடி சாலையை கடக்க முயற்சி செய்தான்.

அப்போது அந்த வழியாக குமரி மாவட்டம், வில்லுக்குறியை சேர்ந்த எப்ரேம் ராய் (57) என்பவர் ஓட்டி வந்த கார் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கபின் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக இறந்தான். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த எப்ரேம் ராய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எப்ரேம் ராய் பத்மநேரி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.


Next Story