திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்


திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்
x

திருவள்ளூரில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக கடந்த நவம்பர் 2-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 9-ந்தேதி பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story