பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

பெண்ணை அரிவாளால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம், விவசாயி. இவரது மனைவி சங்கீதா (33). இவர் அன்னதானம்பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்தின் அருகில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் அன்னதானம்பேட்டையை சேர்ந்த மனோகரன் (50), இவருடைய மனைவி ஜெயலட்சுமி (40), மகன் சத்தியநாராயணன் (21) ஆகியோர் அந்த நிலத்தில் பங்கு கேட்டு அடிக்கடி சங்கீதாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிரை பார்வையிட சங்கீதா சென்றார். அப்போது அங்கு வந்த மனோகரன் தனது மனைவி, மகன் ஆகியோருடன் சேர்ந்து சங்கீதாவிடம் தகராறு செய்து அவரை அரிவாள் மற்றும் மண்வெட்டியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சங்கீதா சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் ஜெயலட்சுமி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மனோகரன், சத்தியநாராயணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story
  • chat