கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர், ஜோசப் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தேவசுமதி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில், தேவசுமதிக்கும் முடித்தலை கிராமத்தை சேர்ந்த இளைய ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தேவசுமதி, ஜோசப்பை பிரிந்து இளையராஜாவுடன் சென்றதாக கூறப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்னர் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேவசுமதி, ஜோசப்புடன் சேர்ந்து வாழ முடிவு செய்து வாழ்ந்து வந்தார்.

சம்பவத்தன்று தேவசுமதி, இளையராஜாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஜோசப், தேவசுமதியின் போனை வாங்கி பேசியபோது, ஜோசப்புக்கும், இளையராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ஜோசப் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளையராஜா தகராறு செய்து ஜோசப்பை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோசப் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.Next Story