அவினாசி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு...!


அவினாசி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு...!
x

திருப்பூரில் எலக்ட்ரீசியனை அரிவாள் வெட்டி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துரங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஸ் குமார்(29) இவருக்கு திருமணமாகி பகவதி (24)என்ற மனைவி உள்ளார். சந்தோல் குமார் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அவினாசியை அடுத்து குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(32) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தள்ளது.

இந்த நிலையில் நேற்ற சந்தோஸ் குமார் ரங்கா நகர் அருகே சுரேசிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ்தான் பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்தோஸ்குமாரின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் வந்ததால் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தோஸ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து சந்தோசை அரிவாளால் வெட்டியை சுரேசை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story