வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'


வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்
x

ராசிபுரம் நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சிக்கு வாடகை பாக்கியை செலுத்தாத புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள செருப்பு கடை, பேன்சி ஸ்டோர் உள்பட 4 கடைகளுக்கு நேற்று மாலையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் கிருபாகரன், சுகாதார அலுவலர் செல்வராஜ், நகராட்சி மேலாளர் வசந்தா மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story